90களில் இருந்து தற்பொழுது வரை தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் ரஜினி.இவருக்கு 90 ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அது குறித்து தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க.
90களில் அசைக்கமுடியாத நடிகராக, சூப்பர்ஸ்டாராக இருந்தவர் ரஜினி. ஆனால், இவர் அதிக சம்பளம் வாங்குவதாக கூறி வினியோகஸ்தர்கள் எல்லாம் சேர்ந்து அவரின் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என கூறிவிட்டனர். இது திரையுலகினருக்கே அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், இப்போது விஜய் போல 90களில் மாஸ் நடிகராக, மிகவும் பிஸியான நடிகராக ரஜினி இருந்த காலம் அது. அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் வரிசையில் நின்ற காலம் அது.
ரஜினிக்கு ரெட் கார்ட் என்கிற விஷயம் விஜய வாகினி ஸ்டுடியோ நிறுவனர் நாகி ரெட்டிக்கு இந்த விஷயம் தெரியவர ‘நான் ரஜினியை வைத்து படம் எடுக்கிறேன். யார் என்ன செய்கிறார்கள் பார்ப்போம்’ என களம் இறங்கினார்.
பி.வாசு இயக்குநர் என முடிவு செய்து ஒரு கதை உருவானது. அதுதான் உழைப்பாளி திரைப்படம். இது வினியோகஸ்தர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ‘சரி படம் முடியட்டும். பார்த்து கொள்வோம்’ என காத்திருந்தார்கள்.அந்த படம் முடிந்ததும் எந்த வினியோகஸ்தரிடமும் செல்லாமல் சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்தார் நாகி ரெட்டி.
அத்தோடு, ரஜினிக்கு சம்பளமாக எதுவும் கொடுக்காமல் வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மூன்று ஏரியாக்களையும் அவரிடம் கொடுத்துவிட்டார். அது அன்றைய ரஜினியின் சம்பளத்தை விட பல மடங்கு அதிகம். இது வினியோகஸ்தர்களுக்கு அதிக கோபத்தை ஏற்படுத்திவிட்டது.
ஒருகட்டத்தில் ஒரு சின்ன ஈகோ பிரச்சனைக்கு எதற்காக சண்டை.. படம் ரிலீஸாகி ரசிகர்கள் பார்க்க வேண்டும் என யோசித்த ரஜினி சென்னை அண்ணாசாலையில் உள்ள வினியோகஸ்தர்களின் அலுவலகத்திற்கு அவரே நேரில் சென்றார். அப்போது வினியோகஸ்தர்களின் தலைவராக இருந்த சிந்தாமணி முருகேசனிடம் பேசி இந்த பிரச்சனைக்கு சுமூக முடிவு எட்டினார்.
ரஜினியே நேரில் போய் பேசியதில் எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்தது.உழைப்பாளி படமும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்து தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!