தமிழ் சினிமாவில் தலைநகரம், படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற திரைப்படங்களை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் இயக்குநர் சுராஜ். இவர் தற்பொழுது நடிகர் வடிவேலுவை வைத்து நாய்சேகர் ரிட்டன்ஸ் என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.
இவர் நடிகர் விவேக் க் உயிருடன் இருந்தபோது ஒரு விருது வழங்கும் விழாவில் அவருக்கு விருது கொடுத்துவிட்டு அவர்களுடைய படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை பேசி இருந்தது இப்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று தான் படிக்காதவன். இப்படத்தில் விவேக்கும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் நடிக்கும் பொழுது அதில் ஒரு காட்சியில் விவேக்கின் முகத்தில் வில்லன்கள் சாணியை அடிப்பார்கள். அந்தக் காட்சியை எடுப்பதற்காக சானியெல்லாம் தயார் செய்து விட்டு ரெடியாக இருந்திருக்கிறார் சுராஜ்.
அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த நடிகர் விவேக் தனக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளதாக கூற, சுராஜ் தர்ம சங்கடமாக உணர்ந்தாராம். விருது வாங்கப் போவதாக சொல்லியவரின் முகத்தில் எப்படி சாணியை அடித்து காட்சியை எடுப்பது என்று தயங்கியிருக்கின்றார்.
பின்னர் ஒரு வழியாக விவேக்கிடம் விஷயத்தை கூறியுள்ளார் . அவரும் எடுத்து விடலாம் என்று அன்று அந்தப் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். அன்று முழுவதும் முகத்தில் சாணி அடிக்கும் காட்சியைத் தான் எடுத்திருக்கிறார்கள். சாணியுடன் இருக்கும் போது அவருக்கு தொலைபேசியில் வாழ்த்துக்கள் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் கால் செய்துள்ளனர். அவரும் சாணியுடன் அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்றதாக இயக்குநர் சுராஜ் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
- நேற்றைய தினம் நடந்து முடிந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே- டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
- வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யா கட்டாயம் வேண்டும்-வம்சியிடம் ரெக்கமன்ட் செய்த விஜய்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!