தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சையில் ஓடிக் கொண்டிருக்கும் விஷயம் தான் சூப்பர் ஸ்டார் சர்ச்சை.ரஜினிகாந்தின் இந்தப் பட்டத்தை விஜய் அபகரிக்கப் பார்ப்பதாகத் தான் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தமக்குள் போட்டி போட்டு வந்தனர்.
அதற்கு இணங்க வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஜய்யை முன்நிறுத்தி அடுத்த சூப்பர்ஸ்டார் இவர் தான் என சரத்குமார் பேசியது சர்ச்சையானது. தொடர்ந்து ஜெயிலர் படத்தின் ஆடியோ லாஞ்சில் ரஜினியும் மறைமுகமாக சூப்பர் ஸ்ராட் பட்ட சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்திருந்தார்.
மேலும் சமீபத்தில் நடந்த லியோ சக்ஸஸ் விழாவில் ஒரே சூப்பர்ஸ்டார் தான் என விஜய் பேசி இருந்தால் கூட சில இடங்களில் தான் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுவது தப்பில்லை என்பது போலவே பேசி இருப்பார். இதனால் இந்த சர்ச்சை தொடர்ந்து வலுத்து தான் வருகிறது.
சிலர் விஜய் தளபதி பட்டத்தினையே பலரிடத்தில் பிடிங்கி வைத்து இருக்கிறார். முதலில் இளையதளபதி பட்டம் நடிகர் சரவணனுக்கு கொடுக்கப்பட்டது. அடுத்து அரசியலில் ஒரு தளபதி இருக்கும் போது விஜய்யை ஏன் அப்படி கூப்பிட வேண்டும். இப்படி விஜயின் பட்டங்கள் எல்லாமே விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் முதன்முதலில் கமல்ஹாசனுக்கு தான் சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1978ம் ஆண்டு இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் போஸ்டரில் சூப்பர்ஸ்டார் என கமலை தான் மையப்படுத்தி இருந்தனர். அதில் ரஜினிகாந்தும் நடித்து இருந்தார். அப்போ அந்த பட்டத்தினை ரஜினி தானே பறித்தார் என்ற பேச்சுகளும் அடிப்பட தொடங்கி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!