• Sep 20 2024

ஆக்ஷனில் அடித்து துவம்சம் செய்தாரா ரத்னம்? விமர்சனம் இதோ..

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவான ரத்னம் திரைப்படம், பல்வேறு தடைகளையும் தாண்டி இன்றைய தினம் வெளியாகி உள்ளது.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரித்துள்ள ரத்னம் படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளார். மேலும் இதில் ப்ரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரகனி மற்றும் ஜோகி பாபு ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் தற்போது வெளியான விமர்சனங்களின் படி,  ஒரு இளம் பெண்ணை ரவுடிகளிடமிருந்து காப்பாற்றும் ஆக்ஷன் ஹீரோவின் கதையும், அந்தப் பெண் ஆபத்தில் இருப்பதற்கான காரணம் என்ன என்பது தான் இந்த படத்தில் கதைக்களமாக காணப்படுகின்றது.


மேலும் மார்க் ஆண்டனி படம் போலவே இந்த படத்திலும் அம்மாவை நினைத்து எங்கும் எமோஷனலான கதாபாத்திரம் விஷாலுக்கு உள்ளதாகவும், இந்த படத்தில் விஷால் சீரியஸாக பேசினாலும் காமெடியாக தெரிவதாகவும் படம் பார்த்த ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரியா பவானி சங்கர் விஷாலின் அம்மாவைப் போல உள்ளதால் அவரைக் காப்பாற்ற போராடும் கதை என்றாலும், அதில் பல பேஸ் ஸ்டோரிகளை வைத்து ஹரி தனக்கே உடைய ஸ்டைலில் விறுவிறுப்பாக இந்த படத்தை எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் அது பல இடங்களில் சறுக்கி உள்ளது.

ஆக மொத்தத்தில் ஹரி - விஷாலின் கூட்டணியில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக ரத்னம் காணப்படுகிறது. ஆனால் அது இளைஞர்களை எந்த அளவுக்கு கவரும் என்பது பற்றி தெரியவில்லை.


Advertisement

Advertisement