• Nov 10 2024

விஜய் வளரனும் என்பதற்காக எஸ்.ஏ.சந்திரசேகர் மற்ற ஹீரோக்களை காலி பண்ண பார்த்தாரா?- இப்படியும் நடந்திச்சா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

1980களில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வந்தவர் தான்  எஸ்.ஏ.சந்திரசேகர்.சட்டம் ஒரு இருட்டறை படம் மூலம் விஜயகாந்தை ஹீரோ ஆக்கியவர் இவர்தான். ரஜினியை வைத்து நான் சிகப்பு மனிதன் என்கிற ஹிட் படத்தையும் கொடுத்தார். புரட்சிகரமான கருத்துக்களை தனது படத்தில் பேசுவார்.

 அரசியல், சட்டம் ஆகியவற்றை கடுமையாக விமர்சிப்பார். அதனால் புரட்சி இயக்குனர் என்கிற பட்டமும் இவருக்கு கிடைத்தது.இவர் தனது மகனான நடிகர் விஜய்யை பெரிய ஹீரோ ஆக்க வேண்டும் என பல முயற்சிகளை எடுத்தவர். நிறைய தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களிடம் சென்று ‘என் மகனை வைத்து படம் எடுங்கள்’ என கோரிக்கை வைத்தார். அப்படி பூவே உனக்காக படம் மூலம் விஜயின் மார்கெட் மேலே சென்றது.


ஒருகட்டத்தில் அப்பாவின் இயக்கத்தில் நடிப்பதை விஜய்யே விரும்பவில்லை. எனவே, வேறு சில நடிகர்களை வைத்து எஸ்.ஏ.சி படங்களை இயக்கினார். ஆனால், எல்லாமே தோல்வி படங்கள். விஜய்க்கு போட்டியாக வந்துவிடுவார்களோ என நினைத்து வளர்ந்து வரும் நடிகர்களை அழைத்து தனது இயக்கத்தில் நடிக்க வைத்து அவர்களின் மார்க்கெட்டை காலி செய்வதுதான் எஸ்.ஏ.சியின் வேலை என்கிற விமர்சனமும் அவர் மீது உண்டு.


இந்நிலையில், ஊடகம் ஒன்றில் ‘விஜய் வளர்ந்து கொண்டிருந்த நேரத்த்தில் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு உங்களுக்கு வந்திருந்தால் சம்மதம் சொல்லீருப்பீர்களா?’ என கேட்டதற்கு ‘கண்டிப்பாக செய்திருப்பேன். ஆனால்,என்னை யாரும் நம்பவில்லை. இன்னும் சொல்லப்போனால் என்னை பார்த்து பயப்பட்டார்கள். பெரிய ஹீரோக்கள் யாரும் எனக்கு கால்ஷீட் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில், விஜய்யின் அப்பாவாக இருப்பதால் அவர்களுக்கு தோல்வி படத்தை கொடுத்துவிடுவேன் என நினைத்தார்கள். அதில் உண்மையில்லை. ஒரு இயக்குநராக நான் வெற்றி பெற வேண்டும் என்றுதானே நினைப்பேன். அது அவர்களுக்கு புரியவில்லை’ என எஸ்.ஏ.சி கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement