• Nov 11 2024

சினிமாவிற்கு வர முதல் நடிகர் சிவாஜி சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாரா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!


சிவாஜி கணேசன் “பராசக்தி” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அவர் சினிமாவிற்குள் அறிமுகமாவதற்கு முன்பு அவர் நாடகத்துறையில் இருந்தார். அவரது இயற்பெயர் கணேசன். அறிஞர் அண்ணா எழுதிய “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்” என்ற நாடகத்தில் அவர் சிவாஜியாக மிகச் சிறப்பாக நடித்ததால் தந்தை பெரியார் அவருக்கு சிவாஜி கணேசன் என்று பெயர் சூட்டினார்.


இவ்வாறு நாடகத்துறையில் மிகப் பிரபலமான நடிகராக சிவாஜி திகழ்ந்தாலும், அக்காலகட்டத்தில் பல கஷ்டங்களை தாங்கியிருக்கிறார். இது குறித்து சிவாஜி கணேசனே ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். அதாவது சிவாஜி கணேசன், ஸ்ரீபாலகானசபா என்ற நாடக சபையில்தான் நடிகராக இருந்தார்.


 அவர் நாடக சபாவில் இருந்தபோது காலை 7 மணிக்கே எழுப்பிவிட்டிடுவார்களாம். அதன் பின் குளித்துவிட்டு கடவுள் வாழ்த்து பாடிவிட்டு நடனப்பயிற்சியிலும் வசனப்பயிற்சியிலும் ஈடுபட தொடங்கிவிடுவார்களாம்.எனினும் அங்கே சாப்பாட்டிற்கு மட்டும் பிரச்சனை இருந்ததாம். 


சாம்பார், கூட்டுப் பொரியல் என்றெல்லாம் சாப்பாடு இருக்காதாம். மோர், ரசம் என்றுதான் சாப்பாடு இருக்குமாம்.அதே போல் அவரது நாடக சபையில்தான் பிரபல பாடகரான டி.ஆர்.மகாலிங்கம் இருந்தாராம். அதே போல் பிரபல நடிகரான எம்.ஆர்.ராதாவும் அவரது நாடக சபாவில் இருந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement