தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் கார்த்தி. இவரது நடிப்பில் 25வதாக வெளியாகிய திரைப்படம் தான் ஜப்பான். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. இப்படம் ரிலீஸாவதற்கு முன்னர் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆனால் இயக்குநர் அமீரை மட்டும் அழைக்கவில்லை.இது குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, சூர்யாவின் சினிமா வாழ்க்கைக்கு துணையாக இருந்தவர் இயக்குநர் அமீர்.சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தில் எப்படி நடிக்க வேண்டும், முக பாவனை, டான்ஸ் என அனைத்தையும் சொல்லிக்கொடுத்தது இயக்குநர் அமீர் தான்.
அந்த படத்தில் இருந்து அமீர் சூர்யாவின் குடும்ப நண்பராக மாறிவிட்டார் அமீரின் இயக்கத்தின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக தனது தம்பி கார்த்தி சினிமாவில் நாயகனாக அறிமுகம் பெற அமீர் தான் இயக்குநராக வேண்டுமென முடிவில் உறுதியாக இருந்தார். ஆனால், கார்த்தி வெளிநாட்டில் படித்துவிட்டு வெள்ளையாக இருந்ததால், பருத்திவீரன் படத்திற்காக அவரை பல நாட்கள் வெயிலில் நிற்க வைத்தார்.
இதைப்பார்த்து சிவகுமார் கதறி அழுதார். அப்போதே சலசலப்பு ஏற்பட்டது.அமீர் தனது சொந்த தயாரிப்பில் பருத்திவீரன் படத்தை தயாரித்தார். ஆனால், படம் நன்றாக இருந்ததால், ஸ்டூடியோகிரின் நிறுவனத்தின் பெயரில் வெளியிட முன் வந்தார் ஞானவேல் ராஜா. படம் வெற்றிகரமாக ஓடி வசூலை பெற்ற போதும், பேசியபடி அமீருக்கு பணத்தை தராததால் பிரச்சினை ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஞானவேல் ராஜா சூர்யா குடும்பத்திற்கு தூரத்து சொந்தம் என்பதால், சூர்யா, கார்த்தியை வைத்து தயாரிப்பாளராக மாறிவிட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
Listen News!