பிக் பாஸ் பிரபலமான நடிகையும், பாஜக நிர்வாகியுமான சோனாலி போகாட் கோவாவுக்கு சென்ற இடத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரது பிரேத பரிசோதனையில் உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்து, சோனாலியின் உதவியாளர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக சோனாலியின் குடும்பத்தார் கூறியிருப்பதாவது, சோனாலியை கொலை செய்யும் முன்பு பாலியல் பலாத்காரம் செய்திருப்பார்கள் என்று சந்தேகப்படுகிறோம். சோனாலியை கோவாவுக்கு அழைத்துச் சென்றதே ஒரு திட்டமிட்ட சதி. ஆகஸ்ட் 24ம் தேதி தான் சோனாலிக்கு கோவாவில் ஷூட்டிங். ஆனால் ஆக்ஸ்ட் 21 முதல் 22ம் தேதி வரை ஹோட்டலில் அறை புக் செய்திருக்கிறார்கள் என்கிறார்கள்.
சோனாலியின் தம்பி ரிங்கு தாகா போலீசாரிடம் கூறியதாவது, சோனாலியின் பி.ஏ. சுதிர் சங்வான், அவரின் உதவியாளர் சுக்விந்தர் தான் இந்த கொலைக்கு காரணம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உணவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டினார் சுதிர் என்றார்.
ரிங்கு தாகா மேலும் கூறியதாவது, ஹரியானாவில் இருக்கும் சோனாலியின் வீட்டில் கடந்த ஆண்டு நடந்த திருட்டுக்கு பின்னால் சுதிர் தான் இருக்கிறார். இறப்பதற்கு முன்பு சோனாலி போன் செய்தார். சுதிரும், சுக்விந்தரும் எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்தபோதே இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு சோனாலி இறந்த செய்தி தான் வந்தது. சோனாலியின் சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்திருக்கிறார்கள். சோனாலி இறந்ததும் சுதிர் தன் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார் என்றும் கூறி உள்ளனர்.
Listen News!