ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்துள்ள "இறைவன் " திரைப்படத்தை இயக்குநர் ஐ அகமது இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா.
ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் சிறந்த நட்சத்திர நடிகர்கள் பட்டாளமும் உள்ளனர் .
இத்திரைப்படம் சிலிர்க்க வைக்கும் திரிலர் கதைக்களத்தை கொண்ட ஒரு திரைப்படம் , கொலையாளி சதித்திட்டத்தை பிடிக்கும் ஒரு நிலையான போலீஸ்காரர் வேடத்தில் கலக்கும் ஜெயம்ரவி ,மேலும் நரேன், விஜயலட்சுமி இருவரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இத்திரைப்படம் நிச்சியமாக தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் என படக்குழு காத்துக்கொண்டிருத்தது அத்தோடு படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது இறைவன் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.
"இறைவன் " திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் படத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர். அருமையான இயக்குனர் , படம் சூப்பர், நீண்டநாளைக்கு பிறகு எதிர்பார்ப்போடு வந்த எங்களுக்கு செம சூப்பர் படம் , நடிகர்கள் நடிப்பு அருமை என பலவாறான விமர்சனங்களை இறைவன் திரைப்படம் பெற்றிருக்கிறது.
Listen News!