விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி'. இந்த தொடர் தான் இப்போது டிஆர்பி லிஸ்டில் டாப்பில் உள்ளது. அத்தோடு பெங்காலியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற தொடரின் உடைய ரீமேக் தான் பாக்கியலட்சுமி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்.
இத்தொடரானது தற்போது விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. அதாவது கதையில் கோபி தனது புதிய வாழ்க்கையை கஷ்டப்பட்டு கடக்க பாக்கியலட்சுமி தனது தொழில் மற்றும் குடும்பத்தை மிகவும் தைரியமாக பார்க்க தொடங்கியிருக்கிறார்.
மேலும் செழியன் அப்பாவாக போகும் விஷயம் அவர்களின் குடும்பத்திற்கு தெரிய வர கோபியின் அப்பா தாத்தா தாத்தா என்று கூறி அவரை கடுமையாக வெறுப்பேற்றி வருகிறார். அதுமட்டுமல்லாது கடந்த சில வாரங்களாக கோபியின் நடிப்பும் அட்டகாசமாக உள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் ரசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவுடன் இணைந்து புதியதாக சீரியல் நடிகர் சஞ்சீவ் இருப்பது போல் ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளனர். இதனால் என்ன கோபி வேடம் சஞ்சீவிற்கு மாற்றப்பட்டதா எனக் கேட்டு வருகின்றனர்.
ஆனால் இப்புகைப்படம் குறித்த உண்மை என்னவென்றால் ரேஷ்மா மற்றும் சஞ்சீவ் இருவரும் இணைந்து விளம்பரப் படம் ஒன்றில் நடித்துள்ளனர். மேலும் ரேஷ்மா ராதிகா கெட்டப்பில் இந்த விளம்பரத்தில் நடித்திருந்தமையால் ரசிகர்களிடம் இந்த குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
Listen News!