• Nov 14 2024

விஜய்யின் லியோவில் இருந்து த்ரிஷா விலகிட்டாரா?- அவருடைய அம்மா கொடுத்த உண்மையான அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகிறது.இதில் முக்கிய கதாப்பாத்தில நடிகை த்ரிஷா நடித்து வருகின்றார்.இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை ஏற்பட்டு த்ரிஷா சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார் என தகவல் வெளியானது.

த்ரிஷா சென்னை விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படத்தால் அவர் லியோவில் இருந்து விலகிவிட்டதாக பேச்சு கிளம்பியது. இதையடுத்து காஷ்மீரில் கடும் குளிராக இருப்பதால் த்ரிஷாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகின.


லியோ படம் பற்றி த்ரிஷாவின் அம்மா உமா கூறியதாவது, லியோவில் இருந்து த்ரிஷா விலகியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அது வெறும் வதந்தி தான்.குளிர் தாங்க முடியாமல் என் மகள் சென்னை திரும்பவில்லை. அவர் காஷ்மீரில் தான் இருக்கிறார். படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

14 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் சேர்ந்து நடித்து வருகிறார் த்ரிஷா. எங்கே அந்த ஜோடியை மீண்டும் சேர்த்து திரையில் பார்க்க முடியாமல் போய்விடுமோ என ரசிகர்கள் பயந்துவிட்டார்கள். இந்த நேரத்தில் தான் த்ரிஷாவின் அம்மா விளக்கம் அளித்து ரசிகர்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.


இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், ஆக்ஷன் கிங் அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். முன்னதாக நடந்த பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோவில் விஜய்யின் எளிமையை பார்த்து ரசிகர்கள் மீண்டும் இம்பிரஸ் ஆகிவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement