• Nov 14 2024

மூத்த நடிகரின் பேரன் தமிழை மூன்றாவது மொழியாகக் கற்றாரா?- சர்ச்சையில் சிக்கிய விக்ரம் பிரபு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபு சாலமோன் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான கும்கி படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் விக்ரம் பிரபு.இப்படத்தில் விக்ரம் பிரபு உடன் இணைந்து லட்சுமிமேனன், தம்பி ராமையா போன்ற பலரும் நடித்திருந்தனர்.

இப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.இப்படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்த இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவர் பார்த்திபேந்திர பல்லவா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் இவர் பேசிய விஷயங்கள் தற்போது சர்ச்சையாக மாறி உள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் விக்ரம் பிரபு பேசியதாவது, " என் தாத்தா பொன்னியின் செல்வன் புத்தகத்தை கொண்டு வா என்று கூறினார், அப்பொழுது தான் நான் தமிழ் கற்றுக் கொண்டிருக்கும் வயது, மூன்றாம் வகுப்பு படிக்கிறேன் என்று நினைக்கிறேன், மூன்றாவது மொழியாக தமிழை படித்தேன். நானும் ஸ்டோர் ரூமில் இருக்கும் புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்தேன்.

ஒரு புத்தகம் இல்ல ஐந்து புத்தகங்கள் இருக்கும் என்று சொன்னார், பொன்னியின் செல்வன் என்று சொன்னாலே இந்த ஒரு விஷயம் மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது, இயக்குநர் மணிரத்னம் அழைத்து இந்த கதாபாத்திரம் தான் உனக்கு என்று சொன்னவுடன் எனக்கு அது ஒரு பெரிய பரிசு போலவே இருந்தது என்று கூறியுள்ளார்

இதை கேட்ட ரசிகர்கள் மிகப்பெரிய நடிகரும், கலைஞருமான சிவாஜி கணேசன் பேரன் தமிழ் மொழியை மூன்றாவது மொழியாக பள்ளியில் படித்தாரா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். பலரும் இவரது பேச்சை சர்ச்சையாக நினைத்தாலும், இவரது ரசிகர்கள் இவர் வெளியூரில் படித்து இருப்பார் அதனால் மூன்றாவது மொழியாக தமிழை படித்திருக்கலாம் என்று இவருக்கு ஆதரவாக பதில் அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement