• Nov 11 2024

என்னது விஜயகாந்த் திருமணத்திற்கு முன்னாடி இந்த நடிகையை காதலித்தாரா... அவங்க யார் தெரியுமா.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கேப்டன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஒரே நபர் நடிகர் விஜயகாந்த். இவர் இந்திய அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகர் எனப் பன்முகத் திறமை கொண்ட ஒருவர். குறிப்பாக 2011-16 காலகட்டத்தில் தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். 


இவர் அரசியலில் நுழைவதற்கு முன்பாக தமிழ் திரையுலகின் மிகப் பிரபல நடிகராக இருந்தார். இவருக்கென்று இருந்த ரசிகர்கள் கூட்டமோ ஏராளம். இவர் நடிப்பில் உருவான படங்கள் எண்ணுக்கணக்கற்றவை. 

இவர் பிரேமலதா என்பவரை 1990-ஆம் ஆண்டு பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஷண்முக பாண்டியன், விஜயபிரபாகரன் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. 


அதாவது நடிகர் விஜயகாந்த் பிரேமலதாவை திருமணம் செய்வதற்கு முன், பிரபல நடிகையான ராதிகாவை மனதார காதலித்து வந்துள்ளாராம். மேலும் விஜயகாந்த் மற்றும் ராதிகா இணைந்து நல்லவன், உழவன் மகன், நீதியின் மறுபக்கம், வீரபாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அந்த சமயத்தில் தான் இருவரும் காதலித்து வந்ததாகவும், பின்னர் அவர்களை பிரபல இயக்குந ர் ஒருவர் பிரித்துவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதன்பினனர் தான் பிரேமலதாவை விஜயகாந்த் திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement