• Sep 20 2024

விஜய்தேவர்கொண்டாவின் குஷி திரைப்படம் ஒரே வாரத்தில் இத்தனை கோடி கலக்ஷனை அள்ளியுள்ளதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும்  இணைந்து நடித்திருந்த, குஷி திரைப்படத்தை இயக்குநர் சிவா நிர்வாண இயக்கி இருந்தார். மைத்ரேயி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்திருந்தது.

 கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தெலுங்கு மற்றும் தமிழ் மற்றும் கன்னடம், மலையாளம் மொழியில் வெளியான இப்படம் வழக்கமான காதல் கதையை அடிப்படையாக வைத்து  எடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த படத்தின் கதையை விறுவிறுப்புடன் கொண்டு சென்ற விதம், ரசிகர்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் ஒரு தரப்பினர் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வந்தாலும், மற்றொரு தரப்பினர் வழக்கம்போல் இப்படத்தில் உள்ள சில குறைகளை சுட்டிக்காட்டி தங்களுடைய நெகட்டிவ் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.


இப்படத்தில் ஜெயராம், சச்சின் கெடேகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகினி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.இந்நிலையில் குஷி படத்தின் வசூல் விவரம் பற்றி தகவல் ஒன்று வெளியானது. அதில் இப்படம் ஒரே வாரத்தில் ரூபாய் 71 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement