• Nov 10 2024

பொன்னியின் செல்வனில் அசிஸ்டெண்ட் டைரக்டரா பணிபுரிந்தாரா விக்ரம்...முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா படம் அவருக்கு கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தது.மேலும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் விக்ரம் தனது கெட்டப்பிற்காக மெனக்கெட்ட அளவில் படத்தின் திரைக்கதையையும் கவனித்திருக்கலாமென்ற விமர்சனமே எழுந்தது.

இதனிடையே அவரது நடிப்பில் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

 தமிழ் சினிமாவில் தன்னுடைய கேரியரை காதல் படங்கள் மூலம்தான் துவக்கினார் நடிகர் விக்ரம் .மேலும்  சில படங்களில் நடித்த அவர், இது தன்னை சினிமாவில் நிலைநிறுத்தாது என்பதை புரிந்துக் கொண்டார். மாற்றுத் தளங்களில் படங்களை தேடிக் கொண்டிருந்த அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது பாலாவின் சேது என்ற திரைப்படம் தான்.

இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தினார் விக்ரம். ஐ போன்ற படங்கள் பிரம்மாண்டத்தின் உச்சமாக வெளியானது. அத்தோடு தன்னுடைய கேரக்டர்கள், கெட்டப்புகள் என இந்தப் படத்தில் சிறப்பு கவனம் செலுத்தினார். படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

மேலும்  இந்தப் படங்களை தொடர்ந்து அதிரடி படங்களில் நடித்துவந்த விக்ரம் சமீபத்தில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் கதையை காட்டிலும் தன்னுடைய கெட்டப்புகள் ரசிகர்களை கவருமென்று பொய்க்கணக்கு போட்டு விட்டார். ஆனால் இந்தக் கணக்கு ரசிகர்களிடையே செல்லுபடியாகவில்லை.

இப் படத்தில் அவரது கெட்டப்புகள், அதற்கான மெனக்கெடல் எல்லாம் கவனத்தை பெற்றாலும், அதுமட்டுமே வெற்றிக்கு போதாது என்பதை ரசிகர்கள் விக்ரமிற்கு புரிய வைத்துள்ளனர். திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தப்படாமல் வெளியான இந்தப்படம் சரியான அடி. இதனிடையே அடுத்ததாக விக்ரம் நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது பொன்னியின் செல்வன்.



மேலும் இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம்.இப்  படத்தின் பிரமோஷனல் டூரில் தற்போது கலந்துக் கொண்டுள்ள விக்ரமிற்கு செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகின்றனர். மிகவும் கெத்தாக அவர் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அத்தோடு நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் படக்குழு ரசிகர்களை சந்தித்துள்ளது.

இதனிடையே இந்தப் படத்தில் தன்னுடைய அனுபவங்கள் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தனது சமீபத்திய பேட்டியில் பல முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், படத்தின் ஒரு காட்சிக்காக காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை குதிரையின் மீதே இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.



அத்தோடு  பல விஷயங்களில் கவனம் செலுத்திவரும் அவர், படத்தில் சில தினங்கள் அசிஸ்டெண்ட் இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளதாகவும் அவர் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் இந்த நாட்களில் படம் குறித்தும் காட்சிகள் குறித்தும் தனது கருத்துக்களையும் பகிர்ந்துள்ளதாகவும் ரவிவர்மன் குறிப்பிட்டுள்ளார்.



இதனிடையே படத்தின் மற்ற கேரக்டர்களான கார்த்தி, ஜெயம்ரவியின் டெடிகேஷன் படத்தின் காட்சிகளில் எப்படி பிரதிபலித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.. மேலும் படத்தில் நந்தினி கேரக்டரில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், ஒரு காட்சிக்காக மழையில் 4 மணிநேரம் ஒரே இடத்தில் அசையாமல் இருந்ததாகவும் சுவாரஸ்யம் பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement