• Sep 21 2024

4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா..? விக்ரம் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தில் சூர்யா ஹெஸ்ட் ரோலில் நடித்திருந்தாலும் இவரது கதாப்பாத்திரம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் இந்த படம் கடந்த ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் இப்பட பாடல்கள் அனைத்துமே செம ஹிட்.

தற்போது படம் வசூலிலும் நல்ல வேட்டை நடத்தி வருகிறது, பட கதையை தாண்டி கமல்ஹாசனும் நல்ல புரொமோஷன் செய்தார் என்று தான் கூற வேண்டும்.

விரைவில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 100 கோடி வசூலை எட்ட இருக்கும் விக்ரம் தற்போது 4 நாள் முடிவில் மட்டும் ரூ. 77 கோடி வரை வசூலித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

அதிலும் வேலை நாட்களான நேற்று திங்கட்கிழமை மட்டுமே படம் ரூ. 10 கோடி வரை வசூலித்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாம்.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் கமல்ஹாசனின் படம் வசூல் வேட்டை நடத்த ரசிகர்கள் படு குஷியில் உள்ளார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement