• Sep 21 2024

என்னது துணிவு டிரைலரில் அஜித் நடிக்கவில்லையா...? அவருக்குப் பதிலாக இந்த நபர் தான் டூப் போட்டு நடித்தாரா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணிக் ஹீரோவாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். ஏனைய முன்னணி நடிகர்களை போலவே இவருக்கும் தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் ரசிகர்கள் உண்டு.

அஜித் நடிப்பில் எந்தப் படம் வெளியானாலும் அந்தப் படத்திற்கு அமோக வரவேற்புக் கிடைத்து வருவது வழமை. இந்நிலையில் இவரின் நடிப்பில் தற்போது 'துணிவு' திரைப்படம் தயாராகி இருக்கின்றது. இப்படமானது வருகிற பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கின்றது.


மேலும் போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்க இவர்களது கூட்டணியில் அஜித் நடித்துள்ள 3வது திரைப்படம் இது. இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் இப்படமானது முழுக்க முழுக்க வினோத் அவர்களின் கதையில் உருவாகி இருக்கிறது. 

அதுமட்டுமல்லாது இதுவரை வந்த போஸ்டர்களில் அஜித் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அத்தோடு பட ரிலீஸ் பொங்கலுக்கு என படக்குழு ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். இதனால் வெளிநாடுகளில் படத்தின் புக்கிங் எப்போதோ தொடங்கிவிட்டது.

அந்தவகையில்  நேற்று மாலை இப்படத்தின் டிரைலர் வெளிவந்து தல ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது. இதுவே அஜித் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்டாக இருந்தது.

இந்நிலையில் தான் தற்போது இந்த டிரைலரில் இடம்பெறும் boat bike காட்சியில் அஜித் நடிக்கவில்லை, அவருக்கு பதிலாக டூப் போட்டு தான் இந்த காட்சியை எடுத்துள்ளார்கள் என சர்ச்சை கிளம்பியுள்ளது.


ஆனால் படக்குழுவினரோ அந்த காட்சியில் டூப் போடவில்லை என்றும், அஜித் தான் ரிஸ்க் எடுத்து அந்த காட்சியில் நடித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளனர். அதுமட்டுமல்லாது இதன்முலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement