நடிகை சமந்தாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை. அண்மையில், சகுந்தலம் பட புரோமோஷன்காக சமந்தா பேட்டியளித்திருந்தார்.
அதில் எனக்கு மயோசிடிஸ் நோய் இன்னும் முழுமையாக குணமாகவில்லை. தொடர்ந்து அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். ஆனாலும் முன்பு இருந்த பாதிப்பில் இருந்து தேறி இருக்கிறேன். இந்த நோய் பாதிப்பில் இருந்து விரைவில் முழுமையாக மீண்டு வருவேன்" என்றார்.
அதே போல குஷி படத்தைநடித்து முடித்ததற்கு பிறகு கொஞ்ச நாள் சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கப் போகின்றேன் என்றும் உடம்பை சரியாகக் கவனிக்கப்போகின்றேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில் சகுந்தலம் படத்தில் எப்படி அதிதி பாலன் நடிக்க ஓகே சொன்னாங்க என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய சமந்தா ஏன் அப்படி ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின் நடிக்க கூடாதா கீர்த்தி சுரேஷின் மகா நடிகை படத்தில் நான் நடிக்கலையா. படத்தில் நமக்கு என்ன கதாப்பாத்திரம் இருக்கு என்று தான் பார்க்க வேண்டுமே தவிர இப்படி எல்லாம் பார்க்க கூடாது.
நல்ல காரெக்டர் என்றால் அந்த படத்தில் நடிக்க வேண்டியது தான் இன்னொரு ஹீரோயின் நடிக்கிறாங்க என்றெல்லாம் இருக்கக் கூடாது என்றும் சகுந்தலம் படத்தில் அவருடைய காரெக்டரும் சூப்பர் காரெக்டர் தான் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!