தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கிய இவர் நடிப்பில் கிட்டத்தட்ட 65இற்கும் அதிகமான படங்கள் வெளியாகி இருக்கின்றன.
அந்தவகையில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படமானது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்காமையினால், தற்போது வெளியாகி இருக்கின்ற வாரிசு படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே அதிகளவான எதிர்பார்ப்புக்கள் இருந்து வந்தன.
இவ்வாறு விஜய் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த 'வாரிசு' திரைப்படமானது பொங்கல் பண்டிகையன்று பிரமாண்டமாக வெளிவந்தது. மேலும் இப்படமானது முதல் இரண்டு நாட்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெருமளவான வரவேற்பை பெறத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு வாரா வாரம் படம் செம வசூல் என பதிவுகள் போட்ட வண்ணம் உள்ளார். இந்நிலையில் அவர் கூறும் வசூல் விவரம் எல்லாம் உண்மையல்ல பொய் எனக் கூறித் தற்போது மற்றோர் தகவல் வெளியாகி இருக்கின்றது.
அதாவது பிரபலங்கள் பலரையும் பேட்டி எடுத்து வரும் சித்ரா லக்ஷ்மன் தெரிவிக்கையில் "மாஸ்டர் படத்தை விட 25 குறைவாக தான் வாரிசு வசூல் செய்துள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் "ஹிந்தியில் படம் எப்படி வசூல் செய்தது என்பது எனக்கு தெரியவில்லை, ஆனால் தெலுங்கில் மாஸ்டர் எவ்வளவு வசூலித்ததோ அதைவிட குறைவாக தான் வாரிசு அங்கு கலெக்ஷன் பெற்றிருப்பதாக அந்த சினிமா துறை தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் கூறினார்" எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு "உண்மையான வசூலைக் கூறாமல் ஏன் தில் ராஜு இப்படி மாற்றி கூறுகிறார் என தெரியவில்லை" என்றும் அந்த தயாரிப்பாளர் தன்னிடம் தெரிவித்தாகவும் சித்ரா லக்ஷமனன் தெரிவித்திருக்கிறார்
Listen News!