• Nov 13 2024

தமிழ் சினிமா தவற விட்ட முக்கிய நடிகர் திலீப்- எப்படி இறந்தார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

1980 ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ”வறுமையின் நிறம் சிவப்பு” என்ற படத்தில் மூலம் அறிமுகமாகியவர் தான் திலீப். இப்படத்தில் கமல்ஹாசன் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் கமல்ஹாசனின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அவரது முதல் படத்திலேயே கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து மலையாளத்தில்‌ ”ஞான் ஏகனன்னு” என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று மலையாள சினிமாவில் அவருக்கு ஒரு திருப்புமுனை ஏற்படுத்தியது.


 தொடர்ந்து படவாய்பபு இல்லாமல் துண்டு கிடந்த திலீப்பை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் இயக்குநர் விசு. 1988 ஆம் ஆண்டு அவர் இயக்கி நடித்த ”சம்சாரம் அது மின்சாரம்” மற்றும் ”பெண்மணி அவள் கண்மணி” படத்தில் நல்ல கனமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் திமிர் பிடித்த மனைவியை கண்டிக்கும் கணவனாக நடித்திருப்பார். பெண்மணி அவள் கண்மணி திரைப்படத்தில் அப்பாவி வெகுளி பெண்ணின் கணவனாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

பின்னர் அதே ஆண்டு இயக்குநர் பி.லெனின் இயக்கத்தில் ”வெளியான சொல்லத் துடிக்குது மனசு” திரைப்படத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் மனைவியை பறிகொடுத்த வாலிபனாக கார்த்திக்கின் நண்பராக நடித்திருப்பார். நல்ல நடிகர் தான் இருப்பினும் அதிக படங்களில் இவர் கவனம் செலுத்தவில்லை. விசுவுக்கு பிறகு இவருக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராஜசேகர் தான். மாப்பிள்ளை திரைப்படத்தின் அமலாவின் சகோதரராகவும் தர்மதுரை திரைப்படத்தில் ரஜினியின் சகோதரரின் மகளை காதலிப்பவராகவும் நடித்திருப்பார்.

இவர் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் ரஜினி சொந்த தயாரிப்பில் எடுத்து வெளி வந்த ”வள்ளி” திரைப்படம் தான். தமிழில் விரல் விட்டு என்னும் அளவிற்கே படங்களில் நடித்துள்ளார். ஏன் இவர் அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. அதிக திரைப்படங்களில் நடித்திருந்தால் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத குணசித்திர நடிகராக உருவெடுத்து இருப்பார். 


உண்மையிலேயே தமிழ் சினிமாவினால் தவற விடப்பட்ட முக்கிய நடிகர் ஆவார். பின்னர் போதிய பட வாய்ப்பு இன்றியும் உடல்நிலை குறைபாடு காரணமாகவும் அவரின் சொந்த ஊரான மைசூருக்கு சென்றார். அங்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement