• Sep 20 2024

பிரம்மாண்டமாக சண்டைக்காட்சிகளை உருவாக்க புனே சென்ற விடாமுயற்சி படக்குழு- ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் ட்ரீட்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் அஜித்தின் துணிவு படம் வெளியாகியதில் இருந்து இவர் அடுத்ததாக யாருடைய படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது. அதன்படி அஜித் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் டைட்டில் டீசர் அஜித்தின் பிறந்த நாளில் வெளியாகியிருந்து.

அதன்படி ஏகே 62 படத்திற்கு விடாமுயற்சி என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆனது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அஜித், லைகா, மகிழ் திருமேனி, அனிருத் தவிர விடாமுயற்சி படத்தில் மேலும் யாரெல்லாம் இணையவுள்ளார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. 


விடாமுயற்சி அப்டேட் வெளியான போது அஜித் நேபாளம், பூடான் நாடுகளில் பைக் ட்ரிப் செய்துகொண்டிருந்தார். பின்னர் சென்னை திரும்பிய அஜித் கடந்த வாரம் கேரளாவின் வயநாடு பகுதிகளில் பைட் ட்ரிப் சென்றிருந்தார். அதனால், விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்க இன்னும் தாமதமாகுமோ என ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

 இப்படியான நிலையில் வரும் 7ம் தேதி விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.விடாமுயற்சி ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை முடித்துவிட்ட மகிழ் திருமேனி, தற்போது படப்பிடிப்பைத் தொடங்க ரெடியாகிவிட்டாராம். அதற்காக தனது படக்குழுவினருடன் புனே சென்ற மகிழ் திருமேனி, அங்கு பிரம்மாண்டமான செட் போடும் வேலைகளை கண்காணித்து வருகிறாராம். 


தற்போது இந்த செட் ஒர்க் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் வந்தால் உடனடியாக படப்பிடிப்பை தொடங்கிவிடலாம் என மகிழ் திருமேனி சிக்னல் கொடுத்துள்ளார். இதனையடுத்து அஜித் விரைவில் புனே செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதற்கட்டமாக அஜித் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க பிளான் போட்டுள்ளாராம்.

அதற்காகவே புனேவில் செட் போடப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரம்மாண்டமாக உருவாகும் இந்த சண்டைக் காட்சி அஜித் ரசிகர்களுக்கு தரமான ஆக்‌ஷன் ட்ரீட்டாக இருக்குமாம். அதேபோல், விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியதும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.


Advertisement

Advertisement