விஜய் டிவி தொலைக்காட்சியில் ஔிபரப்பாகி வரும் சீரியல்கள் பெருமளவில் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்கள், ரஜினிகாந்த் மற்றும் விஜய்யின் படங்களை காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சில சீரியல்கள் TRP ரேட்டிங் குறைந்த காரணத்தினால் ஒருசில சீரியல்கள் அவசரமாக நிறுத்தப்பட்டு, புதிய சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அதன்படி, மூன்று வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டார்' சீரியலை இனியும் இழுத்துக் கொண்டு செல்லாமல், அதன் இரண்டாவது பாகத்தை ஒளிபரப்ப தயாராகி விட்டது விஜய் டிவி.
அத்துடன், சில சீரியல்களில் TRP-யை கூட்ட சூப்பர் ஹிட் படங்களின் காட்சிகளை அட்ட காப்பி அடித்து வருகிறது விஜய் டிவி, என்கிற குற்றச்சாட்டுகளையும் முன் வைத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
அதன்படி மகாநதி சீரியல், தளபதி விஜய் நடித்த 'பிரியமானவளே' படத்தில் வருவது போலவே கதையை நகர்த்திச் செல்வதாக கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு அக்ரீமெண்ட் போட்டு காவேரியை, அஜய் திருமணம் செய்து கொள்கிறார். காவேரி தன்னுடைய தங்கை உயிரை காப்பாற்ற தான் இந்த அக்ரீமெண்ட் திருமணத்திற்கு சம்மதித்தார் என்பது தெரியாமல் அஜய்யின் குடும்பமே காவேரியை வெறுக்க துவங்கி விட்டது.
அதுபோலவே, தமிழும் சரஸ்வதியும் சீரியலில் 'மன்னன்' படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதன்படி குறித்த சீரியலில் தமிழ் வேலை விஷயமாக தன்னுடைய நண்பனுடன் பெங்களூர் செல்வதற்காக ஏர்போர்ட் போன போது, தமிழின் நண்பன் தெரியாமல் ஒரு பெண் மீது மோதுகிறார்.
இதன்போது அவரை அந்த பெண் அடிக்க வருகிறார். உடனே கோவத்தில், தமிழ் அந்த பெண்ணை அடிக்கிறார். பின்னர் பெங்களூருவில் அவர் பார்க்க வருவதே ஏர்போர்ட்டில் அடித்த அந்த பெண்ணை தான் என்பது தெரிகிறது. இதே போன்ற சீன மன்னன் படத்திலும் இடம்பெற்றிருக்கும் எனது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இதனை நோட் பண்ணிய விஜய் டிவி நேயர்களை குறித்த சானலை செம்மையாக கழுவியுற்றி வருகின்றனர்.
Listen News!