• Sep 20 2024

பிரதீப்பின் வன்மத்தை அடக்க வந்த தினேஷ்! ரசிகர்கள் மத்தியில் வலுக்கும் ஆதரவு! வெற்றிக் கிண்ணம் யாருக்கு?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஆரம்பமாகி கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகிவிட்டது. வழமையாக பிக் பாஸ் சீசனின் பாதியில் தான் புது போட்டியாளர்கள் வைல்ட் கார்டாக உள்ளே செல்வார்கள். ஆனால் இந்த முறை போட்டியாளர்கள் தேர்வு கூட விமர்சிக்கப்பட்டது.

இதன் காரணமாக பிக் பாஸ் வரலாற்றில் ஒரே நேரத்தில் 5 பேர் உள்ளே அனுப்பப்பட்டு, யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த தினேஷ்க்கு ரசிகர்கள் சட்டென அதிகரித்துவிட்டது. அவர் வாதிடும் விஷயங்கள் சரியாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தினேஷை வேணும் என்றே பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் டார்கெட் செய்கின்றனர் எனக் கூறி ஏராளமான ரசிகர்கள் தினேஷை ஆதரித்து வருகின்றனர்.


இவ்வாறான நிலையில், இதுவரை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய போட்டியாளராக காணப்பட்ட பிரதீப்பிற்கு தினேஷ் கடும் போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினேஷ் வர முன் நிக்ஸன் தான் அவருக்கு போட்டியாக காணப்பட்டார். எனினும் நிக்ஸனின் தற்போதைய நடவடிக்கையால் ரசிகர்கள் அவர் மீது வெறுப்பை காட்டத் தொடக்கி விட்டனர். அதேவேளை, பிரதீப் செய்யும் சில திமிரான செயற்பாடுகள் மீண்டும் மீண்டும் தொடர்ந்தால் ரசிகர்கள் மத்தியில் தினேஷ்  முதலிடத்தை பிடிக்கவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகின்றது.


எனவே, பிரதீப்பிற்கு சரியான போட்டியாக எதிர்வரும் நாட்களின் தினேஷ் இருப்பாரா, இல்லையா? என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Advertisement

Advertisement