லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் சுமார் 300 கோடி பட்ஜட்டில் உருவான லியோ அக்டோபர் 19-ஆம் தேதி, வெளியானது. விஜய் ரசிகர்களின், ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், வெளியானது முதலே கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், வெளியான முதல் நாளே ரூ.148 கோடி வசூலித்து ரசிகர்களை பிரமிக்க வைத்தது.
அதுமட்டுமின்றி கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் அதிக வசூல் குவித்த தமிழ் படங்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது லியோ.
இப்படம் அம்மாநிலத்தில் மட்டும் ஆறு நாட்களில் ரூ.45 கோடி வசூலித்து உள்ளதாக கூறப்பட்டது. இதே நிலை நீடித்தால், ஜெயிலர் பட சாதனையை லியோ முறியடிக்கும் என ஆர்ப்பரித்த கூறி வருகிறார்கள் தளபதி ரசிகர்கள்.
இது ஒரு புறம் இருக்க இப்படத்தில் கறுகறு கறுப்பாயி என்னும் 90களில் வெளியான பாடல் மீண்டும் லியோ படத்தில் போடப்பட்டது. எனவே இப்பாடலுக்கு நடனமமைத்த தினேஷ் மாஸ்டர் இது குறித்து கூறியுள்ளார். அதாவது இப்பாடலின் ஒரிஜினல் பாடல் எடுக்கப்பட்ட அதே செட்டில் தான் இந்தப் பாடல் மீண்டும் எடுக்கப்பட்டதாம்.இதை தான் லோகேஷிடமே கூறியுள்ளாதாக தெரிவித்துள்ளார்.
Listen News!