தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ஏ ஆர் மூருகதாஸ். இவர் அஜித் நடிப்பில் வெளியான 'தீனா' படத்தினை இயக்கியதன் மூலமாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்,
அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகின்ற இவர் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்பார்' இயக்கி இருந்தார்.
இதனையடுத்து தற்போது அவரது உதவி இயக்குநர் என் எஸ் பொன்குமார் இயக்கத்தில் ஆகஸ்ட் 16 1947 என்ற படத்தினை தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் உடைய டிரைலர் லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
இதன் போது நிகழ்ச்சி மேடையில் பேசிய ஏ ஆர் முருகதாஸ் தான் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்ததாக கூறி இருக்கின்றார். அதுமட்டுமல்லாது பல நடிகர்கள் குறித்தும் பல விசயங்களை பகிர்ந்துள்ளார். தனது முன்னேற்றத்துக்கு பலர் உதவி செய்துள்ளதாக கூறி இருந்தார்.
அத்தோடு ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய பல படங்களில் ஆர்ட் டைரக்டராக இருந்து வந்தவர் டி சந்தானம். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் டி சந்தானம். இந்நிலையில் அவர் பற்றி பேசும் போது ஏ ஆர் முருகதாஸ் கண்ணீர் விட்டு மேடையில் எமோஷ்னலாக பேசியுள்ளார். அதாவது எனக்கு ஒரு பெயின் கொடுத்திட்டுப் போய்டுட்டாரு, அவரது மறைவை என்னால ஏத்துக்க முடியல எனக் கூறி கண் கலங்கியுள்ளார்.
Listen News!