தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் அஜித்தின் தீனா படம் மூலம் இயக்குநர் ஆனவர். தனது முதல் படத்திலேயே யார் இந்த இயக்குநர் என பலரையும் வியக்க வைத்தார்.
இதனையடுத்து பின்னர், ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கஜினி படத்தை ஆமீர்கானை வைத்து இந்தியில் எடுத்தார். அங்கும் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இவ்வாறாக தமிழைத் தொடர்ந்து இந்தியிலும் கால் பதித்த இவர், தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து 'ஸ்டாலின்' என்ற படத்தையும் கொடுத்திருந்தார். இவ்வாறாக பல மொழிகளிலும் தனது திறமையை நிலை நாட்டி வரும் இவர் இன்றைய தினம் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனையடுத்து இவர் குறித்த தகவல்கள் பலவும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது இவரின் சொத்துமதிப்பு தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 72கோடி இருக்கும் எனக்கூறப்படுகின்றது.
Listen News!