• Sep 21 2024

மேலதிக சிகிச்சைக்காக பிரபல தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட இயக்குநர் பாரதிராஜா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் முக்கிய இயக்குநராக வலம் வந்தவர் தான் பாரதி ராஜா. இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. இதனால் இவர் இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்டு வருகின்றார்.

இதனை அடுத்து தற்பொழுது சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திருச்சிற்றம்பலம் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.


அத்தோடு  திருச்சிற்றம்பலம் திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.இந்நிலையில் திடீரென பாரதிராஜாவிற்கு ஏற்பட்ட உடல்நல குறைவால் அவர் சென்னையில் உள்ள் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே தற்போது மேல் சிகிச்சை காரணமாக இயக்குநர் பாரதிராஜா பிரபல தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.   


Advertisement

Advertisement