• Sep 20 2024

மருத்துவமனையில் உள்ள இயக்குநர் பாரதிராஜா... அவரிற்கு இப்படி ஒரு வியாதியும் இருக்கா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

1977 ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா. இவர் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் படம்பிடித்து சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.


இந்நிலையில் பாரதிராஜா, தற்போது இவர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை நேரடியாக பார்த்து வைரமுத்து அவர்கள் நலமும் விசாரித்திருக்கின்றார். குறிப்பாக ஒரு கலைஞனை வாழும் போதே வாழ்த்தியது ரொம்பப் பெரிய விஷயம். அதை வைரமுத்து சிறப்பாகப் பண்ணியிருக்கின்றார். அதாவது நேராக பாரதிராஜாவைப் போய்ப் பார்த்து தென்பாண்டிச் சீமையிலே மெட்டில் இவருக்காக ஒரு பாட்டையும் பாடியிருக்கின்றார்.


அதைக் கேட்டதும் பாரதிராஜா மெய் சிலிர்த்திருக்கின்றார். இப்போது பாரதிராஜா உடல்நிலை சரியில்லாமல் இருந்து மீண்டு வந்தாலும் அவருக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது ஞாபக மறதி தான். இந்த ஞாபக மறதியால் ஒரு சம்பவம் கூட நடந்திருக்கின்றது.

அதாவது பாரதிராஜாவின் நண்பர்கள் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கின்றார்கள். இவரும் அவர்களை சந்திப்பதற்காக இத்தனையும் தேதி தேனீக்கு வந்திடுங்க நம்ம வீட்டிற்கு எனக் கூறியிருக்கின்றார். அந்த நண்பர்களும் அவரைப் பார்ப்பதற்காக குறித்த தேதியில் தேனீக்கு சென்றுள்ளார்கள். அங்கு இருந்தவர்களுக்கு பாரதிராஜா ஏற்கெனவே தனது நண்பர்கள் வருவதாக கூறியதாக சொல்லி, அங்கிருந்தவர்களுக்கு பலத்த உபசரிப்பினை அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.


இவ்வாறாக தனது நண்பர்களை தேனீக்கு வர சொன்ன பாரதி ராஜா, அவருக்கு இருந்த ஞாபக மறதியின் காரணமாக தேனீக்கு செல்ல மறந்துவிட்டாராம். இவ்வாறாக பாரதி ராஜா பற்றி ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement