• Nov 17 2024

இயக்குநர் ஜி. எம். குமார் மருத்துவமனையில் அனுமதி-தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகரும் இயக்குநருமான ஜிஎம் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜிஎம் குமார் சினிமா உலகில் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகங்கள் கொண்டவர்.

இவர் 1986 ஆம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் என்ற படத்தின் மூலம் தான் இயக்குநராக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இவ்வாறு இருக்கையில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஜி எம் குமார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஜிஎம் குமாரின் உடல்நிலை தேறி வருவதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது

இயக்குநர் ஜி எம் குமார் கர்ணன்,, வேலையில்லா பட்டதாரி 2 ,சரவணன் இருக்க பயமேன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் மேலும் இவர். அறுவடைநாள், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement