தமிழ் சினிமாவில் பலராலும் பேசப்படும் காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் நானும் ரௌடி தான் படத்தில் ஒன்றான இணைந்து பணியாற்றிய போது நண்பர்களாகி பின்னர் காதலர்களாக மாறினார்கள்.
பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் எப்போது திருமணத்தில் இணைவார்கள் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாகக் காத்திருந்தனர். அதன்படி இந்த மாதம் 9 ஆம் தேதி திருமணம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியது.
இதற்கிடையே தற்போது இவர்கள் திருமணம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது ஜூன் 9 ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அவர்கள் திருமணம் நடைபெறுகிறதாம்.
மேலும் அவர்கள் திருமணத்தை ஆவணப்படமாக இயக்க இருக்கிறாராம் இயக்குநர் கவுதம் மேனன். அதனை பிரபல OTT தளமான Netflix-ல் ஒளிபரப்பப்படும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!