• Sep 21 2024

விஜய்க்கு வில்லனாகும் இயக்குநர் கௌதம் மேனன்- தளபதி 67 படத்தின் புதிய அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!


குறும்படங்களைத் தயாரித்து வந்த லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறியப்பட்டார். இவருடைய முதல்ப்படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து கார்த்தியை வைத்து கைதி விஜய்யை வைத்து மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

இதனை அடுத்து கமல்ஹாசனின் தீவர ரசிகரான இவர் விக்ரம் படத்தை இயக்கியிருந்தார்.இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு ரூ 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.


மேலும் அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 67 என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.இந்த நிலையில் திடீரென டுவிட்டரில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகவும், அடுத்தபட அறிவிப்பின்போது மீண்டும் வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இப்போது அவர் விஜய் படத்தின் திரைக்கதை வேலைகளில் பிஸியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. கதைப்படி படத்தில் 6 வில்லன்கள் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் பிருத்விராஜ், சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் இப்போது மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநர் கௌதம் மேனன் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


Advertisement

Advertisement