நடிகர் விஜய் தற்பொழுது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.அத்தோடு இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகின்றது.
இதனை அடுத்து தளபதி விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தில் ஏற்கனவே ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் பிரபல பாலிவூட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் வில்லன்களாக நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது கௌதம் மேனன் இந்த படத்திற்காக 47 நாட்கள் கால்சீட் கொடுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து கௌதம் மேனன் படத்தில் முக்கிய கேரக்டர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Listen News!