தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.
அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் அப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதனைத் தொடர்ந்து தளபதி 67 பல தகவல்கள் இணையத்தில் பரவி வருவதை பார்த்து வருகிறோம். அதன்படி இப்படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்து தொடர்ந்து பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது இயக்குநர் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தளபதி 67 குறித்து பேசியிருக்கிறார். அதாவது இயக்குநர் லோகேஷ் தன்னை விக்ரம் படத்தில் நடிக்க அழைத்ததாகவும், ஆனால் அதில் நடிக்க முடியாமல் போனதாக கூறியுள்ளார்.
அத்தோடு லோகேஷ் தன்னை அவரின் அடுத்த திரைப்படத்திலும் நடிக்க அழைத்திருப்பதாகவும் தெரிவித்திருகிறார். இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் கௌதம் மேனன் தளபதி 67-ல் நடிப்பதை உறுதி செய்து தகவலை பரப்பி வருகின்றனர்.
Listen News!