தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் தான் இயக்குநர் ஹலிதா ஷமீம்.
இவர் இயக்கத்தில் வெளியான பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி, ஏலேய் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடத்தே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன.
எனினும் தற்போது அவர் 'மின்மினி' என்ற புதிய படத்தை இயக்கி வருகின்றார். இந்நிலையில் ஹலிதா ஷமீம் இந்தப் படம் குறித்து வெளியிட்டுள்ள தகவல் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
ஒரு படத்தின் கதைக்காக ஒரு இயக்குநரோ அல்லது நடிகரோ ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் காத்திருப்பார்கள். ஆனால் ஹலிதா தனது படத்திற்காக 6 ஆண்டுகளுக்கு மேலாகக் காத்திருக்கிறார்.
மேலும் கதைக்கேற்ப அந்த சிறுவர்கள் 6 வருடங்கள் கழித்து இருக்க வேண்டுமென்று ஹலிதா ஆறு வருடங்கள் காத்திருந்துள்ளார். அவரின் இந்த பொறுமை மற்றும் முயற்சி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஹாலிவுட்டில் கூட இப்படி யாரும் செய்ததில்லை என்று கூறப்படுகிறது.
Listen News!