இந்திய சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் கே. விஸ்வநாத். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் இயக்கிய சலங்கை ஒலி ,சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் ஆகியவை இந்திய சினிமாவில் மிக முக்கிய திரைப்படமாகும்.
நடிகராக கே. விஸ்வநாத், அஜித்குமார் நடித்த முகவரி, விக்ரம் நடித்த ராஜபாட்டை, சூர்யா நடித்த சிங்கம் 2, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, கமலுடன் உத்தம வில்லன், குருதிப்புனல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் லிங்கா ஆகிய படங்களில் தமிழில் நடித்துள்ளார்.
50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர். இவர் மத்திய அரசின் பத்மஶ்ரீ விருதையும் பெற்றுள்ளார். ஆறு முறை இந்திய அரசின் தேசிய விருதை வென்றவர். 8 முறை ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை வென்றவர்.
நேற்று வயது முதிர்வு காரணமாக தன்னுடைய 93 ஆம் வயதில் கே.விஸ்வநாத் காலமானார். அவருக்கு தென்னிந்திய திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.இவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தன்னுடைய இரங்கல் பதிவில், "அஞ்சலி 🌺 பாரம்பரியம், அரவணைப்பு, இதயம், இசை, நடனம், காதல் உங்கள் திரைப்படங்கள் என் குழந்தைப் பருவத்தை மனித நேயத்தாலும் ஆச்சரியத்தாலும் நிரப்பின! ஆழ்ந்த இரங்கல் விஸ்வநாத்ஜி." என ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.
Listen News!