• Nov 11 2024

நடிகர் விஜய் தேவர்கொண்டாவிடம் அந்தரங்கமான கேள்வியைக் கேட்ட இயக்குநர் கரண் ஜோகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பெண்களின் கனவு நாயகனான வலம் வருபவர் விஜய் தேவர் கொண்டா. இவர் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபல்யமானவர்.இதனைத் தொடர்ந்து ராஷ்மிகாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் சாம்ராட் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

இதையடுத்து மகாநதி, நோட்டா ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த வகையில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் 'லைகர்' படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருடன் குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார்.

https://twitter.com/karanjohar/status/1551801686049845249

மும்பையில் குடிசை பகுதியில் வாழும் விஜய் தேவரகொண்டா சர்வதேச அளவில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்கிறார். ஒரு சாதாரண இடத்தில் இருந்து இந்திய அளவில் எவ்வாறு உயர்ந்தார் என்பதை லைகர் படம் கூறி நிிற்கின்றது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி வெளியாகவுள்ளது. லைகர் படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் கரண் ஜோகர் நடத்தி வரும் காபி வித் கரண் சீசன் 7 என்ற நிகழ்ச்சியில், விஜய் தேவர்கொண்டா மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் புரோமோ வெளியாகி உள்ளது.

அதில், கடைசியாக எப்போது உடலுறவு கொண்டீர்கள் என விஜய் தேவரகொண்டாவிடம் கரண் கேட்டுள்ளார். இதெல்லாம் ஒரு கேள்வியா? என்றும், அந்தரங்கமான கேள்வியை ஒரு பொது நிகழ்ச்சியில் கேட்கலாமா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement