தற்போது பிரபல இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் G squad என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருந்தார். ஆனால் லோகேஷை பொறுத்தவரையில் சினிமாவிலேயே நான் இன்னும் 10 படங்கள் தான் எடுப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால் திடீரென நேற்றைய தினம் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதற்கான அறிவிப்பை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி இருந்தார்.
அதாவது லியோ படத்தில் அவர் பட்ட அவமானத்தின் காரணமாகத் தான் இப்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறாராம். சினிமாவை பொறுத்தவரையில் முதலாளியாக இருந்தால் தான் இங்கு மதிப்பு, மரியாதை என்பதை லோகேஷ் உணர்ந்து இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் லியோ படத்தில் விரும்பி தான் லோகேஷ் கமிட்டாகி இருக்கிறார். தயாரிப்பாளர் லலித்தினால் பல அவமானங்கள் சந்தித்ததன் பின்னரே இவ்வாறு செய்யவேண்டும் என திட்டமிட்டிருக்கிறார்.
ஆகையால் சினிமாவில் முதலாளியாக காலுக்கு மேல் கால் போட்டு இருந்தா தான் மதிப்பு என்பதை உணர்ந்து கொண்டு லோகேஷ் அதிரடியாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். மேலும் இந்நிறுவனத்தின் மூலம் முதல் படத்தை உறியடி படத்தின் மூலம் பிரபலம் அடைந்த விஜயகுமார் கதாநாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளார்.
Listen News!