• Sep 20 2024

திடீரென தனது சம்பளத்தை அதிகரித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தாமும் இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையில் எத்தனையோ ஆண்டுகள் உதவி இயக்குநராக பணி புரிபவர்கள் பலர் இருக்கின்றனர். சினிமாவை இயக்குவதென்றால் முன் அனுபம் அதிகம் தேவை என்பதற்காகவே இவ்வாறு துணை இயக்குநராக இருந்து வருகின்றனர்.

இவர்களில் சினிமாவின் மீது இருந்த பற்றாலும் பக்தியாலும் முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து ஹிட் கொடுத்து வரும் மாஸ் இயக்குநராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ்.

மாநகரம், கைதி,மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்து வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'விக்ரம்' படத்தைப் பற்றி புதிய புதிய தகவல்களும் வசூல் நிலவரங்களும் வந்தபடி உள்ளது. நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன.

மேலும் மலையாளத்தில் விக்ரம் படத்திற்கு பெரிய வரவேற்புக் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் விக்ரம் படத்தை ரஜினிகாந்த் ரசித்துப் பார்த்திருக்கிறார். படம் அருமையாக இருக்கிறது என்று படக்குழுவினரை பாராட்டியிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் - கமல் இந்த வெற்றியால் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்து அவர் இயக்க இருக்கும் விஜய் படத்திற்கு சம்பளமாக ரூ.13 கோடி பேசியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement