தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் ஜவான்.இந்தப் படம் வெளியான இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடி வருகிறது. படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்துவரும் சூழலில் படத்தின் வசூலும் 1000 கோடி ரூபாய்களை தாண்டும் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்தப் படத்தின் வசூல் மற்றும் வரவேற்பு நடிகர் ஷாருக்கானை உற்சாகம் கொள்ள செய்துள்ளது.இந்தப் படத்திற்கு சக நடிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் தனது பாராட்டைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தினை தமிழில் பார்த்துவிட்டு படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கமெண்ட் தெரிவிக்கும்படி ஷாருக்கான் லோகேஷ் கனகராஜைக் கேட்டிருந்தார்.மேலும் லியோ படத்தின் வெற்றிக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். தற்போது இதற்கு பதிலளித்துள்ள லோகேஷ் கனகராஜ், விரைவில் ஜவான் படத்தை பார்க்கும் திட்டத்தில்தான் தானும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் லியோ படம் வெளியானவுடன் அந்தப் படத்தை ஷாருக்கானுடன் இணைந்து பார்க்க தான் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!