பல்லவி அனுபல்லவி என்ற கன்னட படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் இயக்குநர் மணிரத்னம். மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளிலும் பல பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி பல விருதுகளை வென்றவர்.தமிழில் பகல் நிலவு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார்.
இந்திய சினிமாவில் தனிக்கென தனி இடத்தை பிடித்த இவர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் களமிறங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.இவர் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸாகவுள்ளது
இந்நிலையில் இன்று காலை இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மணிரத்னம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- “நாங்க கல்யாணம் செய்துக்கப் போறோம்’னு சொல்ல கொஞ்ச நாள் ஆகலாம்”; சீரியல் நடிகை தீபா
- 20 ஆண்டுகளிற்குப் பின்னர் மீண்டும் இணைந்த காதல் ஜோடி…வைரலாகும் புகைப்படங்கள்…வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!
- பிரசாந்தின் வெற்றிக்கு காரணம் வடிவேலு தான்…நம்ப முடியலயே…எதற்காக இப்படி சொல்லுறாங்க..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!