• Sep 20 2024

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆள் உயர கட் அவுட் வைத்த ரசிகர்கள் - மாஸ் காட்டும் மாமன்னன்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

உதயநிதியின் கடைசி படம் என்பதாலும், மாரி செல்வராஜின் இயக்கம் என்பதாலும் ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குக்கு சென்றனர். எதிர்பார்த்தபடியே படம் மிகச்சிறப்பாக இருக்கிறது என்றும்; வழக்கம்போல் மாரி செல்வராஜ் இந்தப் படத்திலும் சமத்துவத்தை பேசியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் புகழாரம் சூட்டிவருகின்றனர்.

குறிப்பாக படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் மிக அருமையாக வந்திருக்கிறது. இனி தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் அளவுக்கு அவரது கதாபாத்திரத்தை மாரி வடிவமைத்திருக்கிறார். 

இதற்கிடையே மாரி செல்வராஜையும், மாமன்னன் படத்தையும் திரையுலக பிரபலங்களும் பாராட்டிவருகின்றனர். 

இந்நிலையில் திருநெல்வேலியில் ஒரு திரையரங்கில் மாமன்னன் படத்தை முன்னிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆள் உயர கட் அவுட் வைக்கப்பட்டிருக்கிறது.

இதனைப் பார்த்த மாரியின் ரசிகர்கள் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் வைக்கப்படுகிறது என்றால் அவர் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை புரிந்துகொள்ளலாம். நிச்சயம் மாரி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருவார் என நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement