தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் மிஸ்கின்.இந்த திரைப்படத்தில்தான் நடிகர் நரேனும் கதாநாயகனாக அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து மிஸ்கின் ஓநாய் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், சைக்கோ, பிசாசு போன்ற பல படங்களை இயக்கினார். தற்பொழுது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார்.
சினிமாவில் தொடர்ந்து புதுவிதமான படங்களை இயக்க வேண்டும் என்கிற ஆசை மிஸ்கினுக்கு உண்டு. தொடர்ந்து பல பேட்டிகளிலும் அதை அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அவரது உதவி இயக்குநர் கூறும் பொழுது படப்பிடிப்பில் மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார் மிஸ்கின் என்று கூறியுள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் முக்கியமான காட்சிகள் படமாக்கும் பொழுது மதிய சாப்பாடு நேரத்திற்கு கிடைக்காது என்று கூறுகிறார் அவரது உதவி இயக்குநர். இப்படி ஒரு முறை படப்பிடிப்பு நடக்கும் பொழுது நடிகைக்கான காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது அந்த காட்சியை பலமுறை படமாக்கியும் சரியாக வராததால் யாரையுமே மதிய சாப்பாட்டுக்கு அனுப்பாமல் அந்த காட்சியை படமாக்கி கொண்டிருந்தார் மிஸ்கின்.
இதனால் சோர்வடைந்த நடிகை அங்கேயே மயங்கி விழுந்து விட்டாராம். அதன் பிறகு அவரை எழுப்பி அப்போதும் கூட உணவு கொடுக்காமல் குளுக்கோஸ் தண்ணீர் மட்டும் கொடுத்து, படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு அனைவரையும் உணவருந்த அனுப்பி இருக்கிறார் மிஸ்கின். இந்த விஷயத்தை அவரது உதவியாளர் பேட்டியில் கூறியிருந்தார். இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
Listen News!