• Sep 20 2024

பிக்பாஸ் கவினுடன் ஜாலியாக பொழுதைக் கழித்து வரும் இயக்குநர் நெல்சன்-பாராட்டி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் பீஸ்ட். இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்களின் மத்தியில் உருவாகிய இத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இருந்தாலும் இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாத நெல்சன் அடுத்ததாக நெல்சன் ரஜினியின் 169-வது படத்தை இயக்கி வருகின்றார். பீஸ்ட் படம் கடுமையான விமர்சனத்தைப் பெற்றாலும் அனைவரின் கவனமும் தற்போது தலைவர் 169 படம் மீது திரும்பியுள்ளது.

இது தவிர நெல்சன் ஜாலியாக நடிகர் கவினுடன் விளையாடி பொழுதை கழித்து வருகிறார். இதனை கவின் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டு இருக்கிறார்.

இதனால் நெல்சனின் இந்த பாசிடிவ் எனர்ஜியைப் பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருவதோடு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement