• Sep 21 2024

தொகுப்பாளினி டிடியுடன் இயக்குநர் நெல்சனின் குடும்பம் -லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கும் ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் நெல்சன் திலீப்குமார். இவர் வளர்ந்து வரும் ஒரு இளம் இயக்குநரும் கூட. இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான "கோலமாவு கோகிலா" என்ற திரைப்படத்தினை இயக்கி மக்கள் மத்தியில் பிரபல்யமானவர்.

இதனைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனை வைத்து "டாக்டர்" என்ற படத்தையும், பீஸ்ட் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அது மட்டுமல்லாது தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 169-ஆவது படமாகிய ஜெயிலர் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கின்றார்.

இந்நிலையில் இயக்குநர் நெல்சன் திரையுலக வாழ்க்கையில் மட்டும் அல்லாது குடும்ப வாழ்க்கையிலும் சிறந்து விளங்குகிறார். இவருக்கு மனைவி, மகன் என்று ஒரு அழகான குடும்பமே இருக்கின்றது.

நெல்சன் திரைப்படங்களை இயக்குவதில் ஆக்டிவாக இருப்பது போலவே இவரது மனைவியாகிய மோனிஷா நெல்சனும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் தனது கணவன் மற்றும் மகனுடன் என்ன போட்டோ எடுத்தாலும் அதை உடனே இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவார்.

இந்நிலையில் இவர் தற்போதும் லேட்டஸ்ட் ஆக எடுத்த தனது குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் தங்களது லைக்ஸை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

அத்தோடு அவரின் குடும்பத்துடன் தொகுப்பாளினி டிடியும் உள்ளாராம்.இந்த புகைப்படம் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement