• Nov 17 2024

இரவு நேர செக்யூரிட்டியாக வேலை செய்த இயக்குநர் பாண்டியராஜ்- எப்படி இயக்குநர் ஆனார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக இருப்பவர் தான் பாண்டியராஜ். இவர் பசங்க என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.4 சிறுவர்களை வைத்துக்கொண்டு அழகாக திரைக்கதை அமைத்திருந்தார். மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. 

அடுத்ததாக  நடிகர் அருள்நிதி நடிப்பில் வம்சம் படத்தை இயக்கியிருந்தார். அடுத்து, நடிகர் சிவகார்த்திகேயனை மெரினா என்கிற படத்தில் அறிமுகப்படுத்தினார். கோலிசோடா படத்திற்கு கதை எழுதியவர் இவர்தான். இது தவிர பசங்க 2, இது நம்ம ஆளு, கதகளி, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.


பாண்டிராஜ் புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிமலையை சேர்ந்தவர். சினிமா இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். ஆனால், எந்த இயக்குநரும் இவரை உதவியாளராக சேர்த்துக்கொள்ளவில்லை. எனவே, வாழ்வாதாரத்துக்காக ஏவிஎம் ஸ்டுடியோ நிறுவனத்தில் இரவு நேர செக்யூரிட்டியாக வேலை செய்துள்ளார். மேலும், இயக்குநர் மற்றும் நடிகர் பாக்கியராஜின் பாக்யா இதழ் அலுவலகத்தில் ஆபிஸ் பாயாகவும் வேலை செய்தார்.


பாண்டிராஜ் கவிதைகளும் எழுதுவார். அதை பார்த்த பாக்கியராஜ் அவரின் கவிதைகளை பாக்யா இதழில் வெளியிட்டார். அதன்பின் எடிட்டோரியல் பிரிவில் அவருக்கு வேலை கிடைத்தது. அதன் பின்னரே இயக்குநர் சேரனிடம் உதவியாளராக சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement