தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து லவ்டுடே என்னும் திரைப்படத்தினை தானே இயக்கி நடித்திருந்தார்.
இப்படத்தின் மூலம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.இதனை அடுத்து இவர் யாரை வைத்து படம் இயக்குவார் என் எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக் காணப்படுகின்றது.
அத்தோடு இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் இடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மிதுன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!