• Sep 20 2024

நாடக கலைஞர் போல வேடமிட்டு மிரட்டியிருக்கும் இயக்குநர் செல்வநாயகன்-பகாசூரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்தின் மச்சினனும் நடிகை ஷாலினியின் சகோதரனுமான ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திரெளபதி. இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் தான் மோகன் ஜி. இப்படம் வௌயாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றாலும் பல எதிர்ப்புகளையும் சந்தித்தது.

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரிச்சட்டை வைத்து ருத்ர தாண்டவம் என்னும் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் தர்ஷா குப்தா கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.மதமாற்ற பிரச்சனையை இப்படம் வெளிப்படையாக எடுத்துக் கூறி இருந்தது.

இந்த நிலையில் இவர் மூன்றாவது முறையாக இயக்கியுள்ள திரைப்படம் தான் பகாசூரன். இப்படத்தில் இயக்குநராக செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். மேலும் இப்படத்திலிருந்து சமீபத்தில் மகாபாரத புத்தகம் இருக்கும் படியான டைட்டில் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையில் உருவாகி வரும் பகாசூரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். நாடக கலைஞர் போல வேடமிட்டு செல்வராகவன் இருக்கும் மிரட்டலான போஸ்டர் ரசிகர்களை மிரட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement