இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகனான செல்வராகவன் துள்ளுவதோ இளைமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.
தனது தம்பி தனுஷை இதில் கதாநாயகனான நடிக்கவைத்திருந்தார். அவர் இயக்கிய முதல் படத்திற்கு ஒருதரப்பினரிடம் இருந்து விமர்சனங்கள் எழுந்தன.
துள்ளுவதோ இளைமை படத்தைத் தொடர்ந்து தனுஷ், சோனியா அகர்வாலை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். காதல் கொண்டேன் படத்தை த்ரில்லர் ஜானரில் உருவாக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் செல்வராகவன். இந்தப் படத்தில் தனுஷின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.
காதல் கொண்டேன் வெற்றியைத் தொடர்ந்து தனுஷை வைத்து புதுப்பேட்டை, மயக்கம் என்ன அடுத்தடுத்த படங்களை இயக்கினார். இவை தவிர செல்வராகவன் மற்ற ஹீரோக்களை வைத்து இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் படமெல்லாம் காலத்துக்கும் அழியாத படங்களாக உள்ளன.
நடிப்பு, இயக்கம் என பிஸியாக இருக்கும் செல்வராகவன் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் மகனின் குட்டி சைக்கிளிலில் பின் மகனை அமரவைத்து ஜாலியாக விளையாடி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறதுடன் வைரலாகி வருகின்றது.
Listen News!