• Sep 20 2024

நடிகர் அஸ்வினின் ‘செம்பி’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் திகதியை அறிவித்த இயக்குநர் செல்வராகவன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் சீசன் 2 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் அஸ்வின். இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

இருப்பினும் குக்வித் கோமாளியில் பிரபல்யமானதை அடுத்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருவதோடு ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘செம்பி’.இத்திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரபல இயக்குநர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். ஜீவன் ஒளிப்பதிவில் புவன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் அஸ்வினுக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement