தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘RC 15’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் ஷங்கரின் முதல் தெலுங்குப் படமாகும். படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார், தமன் இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்க படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் மார்ச் 27ஆம் தேதி வெளியாகிறது.
இயக்குநர் ஷங்கர் பாடல்களை ஆடம்பரமாக படமாக்குவதில் பெயர் பெற்றவர். அவர் பாடல் கருப்பொருள்களுக்கு அருமையான யோசனைகளைக் கொண்டு வருகிறார். இப்படத்திற்கு நடனம் அமைக்க பிரபுதேவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தற்போது படத்தின் முக்கிய பாடலுக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் பாடலுக்கு குதிரைகளைப் பயன்படுத்துவதாக தெரிகிறது. அந்த வகையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், ஷங்கர் குதிரை சவாரி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுயிருக்கிறார்.
இயக்குநர் ஷங்கர் மகிழ்ச்சியுடன் குதிரை சவாரி செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில், ஷங்கர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தையும் ராம் சரணின் ‘RC 15’ படத்தையும் ஓரே நேரத்தில் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
A journey that has me back to back in the saddle!
Towards #RC15 pic.twitter.com/spv0c18y9R
Listen News!